இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக நடிகை ரிச்சா சதா, "செக்ஷன் 375" என்ற படத்தில் நடிக்க உள்ளாராம். நாட்டில் பாலியல் பலாத்கார சட்டம் எவ்வாறெல்லாம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை சஸ்பென்ஸ் கலந்து சொல்வது தான் படத்தின் கதை.
மணிஷ் குப்தா இயக்கும் இப்படத்தை, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர் தயாரிக்கிறார்கள். வழக்கத்திற்கு மாறான பாலியல் பலாத்கார சம்பவத்தை மையப்படுத்தியே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பலாத்காரமா அல்லது கள்ளக் காதல் விவகாரமா என முடிவுக்கு வரமுடியாமல் நீதிபதிகளை குழப்பும் வகையிலான வழக்கை பற்றியதாக இப்படம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அக்ஷய் கண்ணா வழக்கறிஞர் வேடத்திலும், ரிச்சா சதா அரசு தரப்பு வழக்கறிஞர் வேடத்திலும் நடிக்கிறார்களாம்.