திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
வை ராஜா வை படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லாத டாப்சி, இந்தி சினிமாவில் செட்டிலாகி விட்டார். அவ்வப்போது தெலுங்கில் மட்டும் ஓரிரு படங்களில் தலைகாட்டி வருகிறார். மேலும், தற்போது இந்தியில் நான்கு படங்களில் நடித்து வரும் டாப்சி, பாலிவுட்டில் பரபரப்பான நடிகையாக்கிக் கொண்டிருக்கிறார்.
அவர் விடுத்துள்ள ஒரு செய்தியில், பாலிவுட்டில் பிரபல நடிகைகளும் கவர்ச்சிகரமான வேடங்களில் நடிக்கிறார்கள். அதனால் இதுவரை ஆக்சன் மற்றும் பர்பாமென்ஸ்க்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில் நடித்துள்ள நான், அடுத்தபடியாக கவர்ச்சிகரமான கதைகளில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்றொரு பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார் டாப்சி.
அதோடு, என்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் நான் ஜாலியாக பழகுவதை வைத்து பாலிவுட்டில் தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவி வருகிறது. அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அதற்காக நடிகர்களுடனான நட்பை நான் முறித்துக்கொள்ள மாட்டேன். காரணம், அனைவரிடமும் சகஜமாக பழகுவது எனது ரியல் கேரக்டர் என்றும் கூறியுள்ளார் டாப்சி.