Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என் வாழ்க்கையில் எந்த திட்டமிடலும் இல்லை : ரகுல் ப்ரீத் சிங்

13 பிப், 2018 - 15:41 IST
எழுத்தின் அளவு:
I-have-never-planned-anything-in-my-life---Rakul-Preet-Singh

டில்லியை சேர்ந்த பஞ்சாப் பொண்ணு நடிகை ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் இவர், தற்போது பாலிவுட்டில் நடித்து இருக்கிறார். அய்யாரி என்ற படத்தில் சித்தார்த் மல்கோத்ராவுடன் நடித்துள்ளார். இப்பட அனுபவம் குறித்து ரகுல் அளித்த சிறப்பு பேட்டி இதோ...

அய்யாரி படத்தில் நடிக்க என்ன காரணம்?

நிறைய காரணங்கள் உள்ளன. நீரஜ் பாண்டே இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. தோனியின் வாழ்க்கை படத்தின் போதே வாய்ப்பு வந்தது. நானும் நடிக்க தயாராக இருந்தேன். ஆனால் தோனி பட ஷூட்டிங் தாமதமானதாலும், வேறு படங்களில் நடிக்க வேண்டியிருந்ததாலும் என்னால் அப்போது நடிக்க முடியவில்லை. மீண்டும் நீரஜ் பாண்டே, அய்யாரி படத்திற்காக என்னை அணுகியபோது என்னால் மறுக்க முடியவில்லை, உடன் சம்மதம் சொன்னேன். மேலும் படத்தில் எனது ரோலும் சிறப்பாக இருந்தது. அதனால் நடித்தேன்.

படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க?
சோனியா குப்தா என்ற ரோலில் ஐடியில் வல்லுநராக நடிக்கிறேன். சித்தார்த் உடன் படம் முழுக்க பயணிக்கிற மாதிரி ஒரு கேரக்டர். என் பயணம் எதை நோக்கி செல்கிறது என்பதை திரையில் பார்த்து கொள்ளுங்கள்.

தென்னிந்திய படங்களில் நடித்து வந்த நீங்கள் திடீரென ஹிந்தியில் நடித்தது எப்படி?
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் எந்த திட்டமிடலும் வைத்து கொள்வது இல்லை. தென்னிந்திய படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் திட்டமிடவில்லை. அங்கு வாய்ப்பு வந்தது நடித்தேன். அதேப்போன்று அய்யாரி ஹிந்தி வாய்ப்பும் வந்தது நடித்தேன். என் வாழ்க்கையில் நான் எந்த திட்டமிடலும் செய்யவில்லை. இன்றைக்கு நான் இந்தளவுக்கு வளர்ந்து இருக்கிறேன் என்றால் நிச்சயம் அதற்கு தென்னிந்திய ரசிகர்கள் தான் காரணம்.

தென்னிந்தியா மற்றும் பாலிவுட்டில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
இரண்டு துறையிலும் நிறைய நடிகர்களை எனக்கு பிடிக்கும். இருந்தாலும் தென்னிந்தியாவில் அல்லு அர்ஜூனையும், பாலிவுட்டில் ரன்வீர் சிங்கையும் ரொம்ப பிடிக்கும். இருவருக்குள்ளும் அப்படி ஒரு எனர்ஜி இருக்கும். யதார்த்தமாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
அதிர்ஷ்டத்தை நம்புவேன். அதேசமயம், ஒரு நபர் தன் கடின உழைப்பை சரியாக செய்தால் அவர்களின் செயலில் வெற்றி பெறலாம். அதையே நீங்கள் நெகட்டீவ்வாக எண்ணினால் அது நெகட்டீவ்வாகவே முடியும். உங்கள் வேலையை கஷ்டப்பட்டு உண்மையாக செய்தால் அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும்.

சிபாரிசு பற்றி உங்கள் கருத்து?
சிபாரிசை நான் நம்புவது இல்லை. அதில் தவறு ஏதும் கிடையாது. காரணம், ஒரு மகனுக்கு தந்தை உதவவில்லை என்றால் எப்படி? இன்றைக்கு நிறைய வாரிசு நடிகர்கள் சினிமாவில் இருக்கிறார்கள். இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே அவர்களால் ஜெயிக்க முடியும். சினிமாவிற்கு அப்பாற்பட்டவர் நான். இன்றைக்கு இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் என்னுடைய கடின உழைப்பு தான். நான் தெலுங்கு மொழியை நன்றாக பேசுவேன். ஐதராபாத்தில் சொந்தமாக வீடு உள்ளது. மூன்று ஜிம் வைத்திருக்கிறேன். சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன்.

நீங்கள் நடித்த தென்னிந்திய படங்களில் எந்த படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய விரும்புகிறீர்கள்?
நிறைய தென்னிந்திய படங்கள் ஹிந்தியில் டப்பாகி வெளியாகி உள்ளன. சில படங்கள் ரீ-மேக்காகி வரவேற்பை பெற்றுள்ளன. அந்தவகையில் நான் நடித்த துருவா(தெலுங்கு) மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று(தமிழ்) படங்களை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய வேண்டும்.

Advertisement
மூன்று நாளில் ரூ.40 கோடி - பட்டைய கிளப்பும் பேட் மேன் வசூல்மூன்று நாளில் ரூ.40 கோடி - பட்டைய ... சல்மான்கானுடன் ஜோடி சேரும் எமிஜாக்சன் சல்மான்கானுடன் ஜோடி சேரும் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  Tamil New Film Kalavani Mappillai
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in