விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 75 மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பி உள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு நேற்று மாலை திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டதால் சோர்வுற்றார். உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அமிதாப் கடுமையான முதுகுவலி மற்றும் கழுத்துவலியால் அவதியுற்றதாக தெரிவித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அமிதாப், வீடு திரும்பி உள்ளார்.
உறவினர்கள் கூறுகையில், அமிதாப்பிற்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை வெளி நோயாளிகள் பிரிவில் வைத்து நடந்தது. தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்றனர்.