பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் மற்றும் பலர் நடிக்க பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட் மேன்' படம் பட வெளியீட்டில் முதல் முறையாக ஒரு புதிய சாதனையை நிகழ்த்த உள்ளது. இதுவரை ரஷ்ய நாட்டில் வெளியாகும் இந்தியப் படங்கள் தாமத வெளியீடாகத்தான் திரையிடப்பட்டுள்ளன. ஆனால், 'பேட் மேன்' படம் இந்தியாவில் வெளியாகும் தினமான நாளையே ரஷ்யாவிலும் ஒரே நாளில் வெளியிடப்படுகிறது. அது மட்டுமல்ல ஐவரி கோஸ்ட், ஈராக் ஆகிய நாடுகளிலும் அது போல் ஒரே நாளில் வெளியாகிறது.
தமிழரான அருணாச்சலம் முருகானந்தம், குறைந்த விலையில் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்துக் கொடுத்து சிறந்த சமூக ஆர்வலராக இருப்பவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த 'பேட் மேன்' படத்தை பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக புரமோஷன் செய்து வருகிறார்கள்.
இந்தியத் திரையுலகில் இந்த ஆண்டின் சிறந்த படமாக 'பேட் மேன்'அமையும் என பாலிவுட் திரையுலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.