வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நிவின்பாலி ஹீரோவாக நடித்தாலும் கூட, த்ரிஷா மலையாளத்தில் முதன்முதலாக நடிக்கும் படம் என்பதாலேயே சிறப்பு கவனம் பெற்றுள்ளது 'ஹே ஜூடு' திரைப்படம். தன்னை வைத்து ஏற்கனவே 'இவிடே' படத்தை இயக்கிய இயக்குனர் ஷ்யாம் பிரசாத்துடன் நிவின்பாலி கூட்டணி சேர்ந்துள்ள இந்தப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு கோவாவில் தான் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் கோவாவில் நேற்றுடன் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தனர் படக்குழுவினர். படப்பிடிப்பு முடிவடைந்ததும் அதை கொண்டாட, இயக்குனர், ஒளிப்பதிவாளருடன் ஜாலியாக படகு பயணம் சென்று வந்துள்ளனர் நிவின்பாலியும் த்ரிஷாவும்.
அடுத்ததாக விஜய் - முருகதாஸ் படத்தில் பணியாற்றப்போகும் கிரீஷ் கங்காதரன் தான் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.