பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சித்தார்த் மல்ஹோத்ரா, மனோஜ் பாஜ்பாய், நஸ்ரூதின்ஷா, அனுபம்கெர், ரகுல் பிரீத்சிங் உள்பட பலர் நடித்துள்ள படம் அய்யாரி. ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று இந்த படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் படக்கழு புரொமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நேரத்தில் கடந்த சில மாதங்களாகவே திரைக்கு வர முடியாமல் சிக்கல்களை சந்தித்து வந்த பத்மாவதி மற்றும் அக்ஷ்ய் குமாரின் பேடுமேன் ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்க்கப்பட்டு வரும் மெகா படங்கள் என்பதால், இந்த படங்களுடன் மோத வேண்டாம் என்று, அய்யாரி படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 9-ந்தேதிக்கு மாற்றி வைத்து விட்டனர்.