இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
கார்கில் போரில் வீர மரணம் அடைந்த நம்முடைய ஹீரோக்களான ராணுவ வீரர்களில் கேப்டன் விக்ரம் பத்ராவும் ஒருவர். இவரது வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாகிறது. இதில் விக்ரம் பத்ரா ரோலில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கார்கில் போரை மையமாக வைத்து படம் உருவாகிறது. அந்த கதை என் மனதை தொட்டதுடன், மிகவும் பிடித்துபோனது. இதுபோன்றதொரு ரியலான ரோலில் நான் இதுவரை நடித்தது இல்லை. விக்ரம் பத்ராவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அவரைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, அவர் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை முழுவதுமாக அறிந்து நடிக்கிறேன். இது ஒரு சிறப்பான அனுபவம், முற்றிலும் வித்தியாசமான அனுபவம் என்று கூறியுள்ளார்.
சித்தார்த் மல்கோத்ரா, தற்போது அய்யாரி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ரகுல் ப்ரித் சிங், மனோஜ் பாஜ்பாய் ஆகியோரும் முதன்மை ரோலில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஜன., 26-ம் தேதி ரிலீஸாகிறது.