தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் சிலரின் ஜோடி பெருத்தம் பிரமாதமாக இருக்கும். அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி உள்ளிட்ட இன்னும் சில விஷயங்கள் நன்றாகவே ஒர்க்-அவுட்டாகும். அப்படி பாலிவுட்டில் பேசப்பட்ட ஜோடி அனில் கபூர் - மாதுரி தீட்சித். இந்த ஜோடி, ராம் லகான், பெட்டா உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்போது மீண்டும் இணைந்து "டோட்டல் தமால்" என்ற படத்தில் நடிக்கிறார்கள்.
இதுகுறித்து அனில் கபூர் கூறியதாவது, மாதுரி உடன் நடிக்க மிகவும் ஆவலாய் உள்ளேன். நாங்கள் இருவரும் இணைந்து நிறைய படங்களில் நடித்தோம். ரசிகர்கள் எங்களது நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள், விரும்பினார்கள். சக நடிகை பற்றி நன்கு புரிந்து கொண்டவர்கள் மீண்டும் இணையும்போது சிறப்பாக இருக்கும். மீண்டும் நாங்கள் ரசிகர்களை மகிழ்விப்போம் என்றார்.
"டோட்டல் தமால்" படம் வரும் டிசம்பர் 7-ம் தேதி ரிலீஸாக உள்ளது.