இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நல்ல படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார், தினேஷ். இதனால், தனக்கு, 'செட்'டாகும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து, நடிக்கிறார். அடுத்து வெளியாகவுள்ள, உள்குத்து படம் பற்றி, நம்மிடம் அவர் பேசியதாவது:
அது என்ன தலைப்பு உள்குத்து?
திருடன் போலீஸ் படத்தை இயக்கிய, கார்த்திக் ராஜ் எடுத்த படம் இது. யதார்த்தத்தை மீறாத ஒரு கதை. கந்து வட்டி பிரச்னை, நண்பன் வாழ்க்கை, அக்கா - தங்கை பாசம் இப்படி பல விஷயங்களை சொல்லும் படமாக இது இருக்கும். சுருக்கமாக கூற வேண்டுமென்றால், மகாபாரத சகுனி கதை போல என, இதை சொல்லலாம். சண்டை காட்சிகளும் அதிகம் இருக்கு. படப்பிடிப்பு துவங்கியதுமே, சண்டை காட்சியில் தோளில் அடிபட்டது. அதே வலியுடன் தொடர்ந்து நடித்தேன்.
படத்தில் உங்கள் தோற்றம் எப்படி?
ரொம்ப அழுக்காக இருப்பேன். பனியன் லுங்கி என, இந்த படத்துக்காக சுத்தமாக மாறி இருக்கிறேன். மீன் வெட்டுவேன், பூ கட்டுவேன், இப்படி பல சிறப்புகள் உள்ளன. படத்தின் பெரும்பாலான காட்சிகள், ஆழமான கடல் பகுதியில் எடுக்கப்பட்டன. எனக்கு, அதுவே பெரிய அனுபவம் தான்.
நந்திதாவுடன் மீண்டும் நடித்தது பற்றி?
அந்த பொண்ணு, ரொம்ப இயல்பான பொண்ணு. நல்லா பழகுவாங்க. அவங்களும் சரி; நானும் சரி; கொஞ்சமும் மாறவில்லை; அப்படியே தான் இருக்கோம்.
சினிமாவுக்கு வந்த பின், உங்கள் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீங்க ?
படித்து முடித்ததுமே, சினிமா ஆசை எனக்குள் இருந்தது. 'ஹால் டிக்கெட்'டில் ஒட்டி இருந்த போட்டோவை எடுத்து, 'பிரின்ட்' போட்டு, சினிமா கம்பெனிகளுக்கு வாய்ப்பு கேட்டு போயிருக்கேன். வண்ணாரப்பேட்டையிலிருந்து, சாலிகிராமம் வரை, நடையாக நடந்திருக்கிறேன். பெண் என்ற, 'டிவி' சீரியலில், சீதா மேடத்தின் பையனாக, முதல் முதலாக கேமரா முன் நின்றேன். ஆடுகளம், மவுன குரு போன்ற படங்களில் சிறிய வேடங்கள் கிடைத்தன. தொடர்ந்து போராடினேன்; அதற்கு கிடைத்த வெற்றி தான், அட்டக்கத்தி வாய்ப்பு. நான், இப்போது தான், பந்தயத்தை துவக்கியுள்ளேன். இன்னும் நிறைய ஓட வேண்டியுள்ளது.
உங்களின், 'மைனஸ்' என்ன?
எல்லாருமே வாழ்க்கையில் கொஞ்சம் பொறுமையா இருக்கணும். ஆனால், நான் இன்னும் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த விஷயத்துக்கும், உடனே, 'ரியாக்ட்' செய்யும் பழக்கம் என்னிடம் உள்ளது; அதை கைவிட வேண்டும். ஓரளவு வளர்ந்த பின், அந்த பக்குவம் வந்து விடும் என, நினைக்கிறேன்.
2௦17ம் ஆண்டு எப்படி இருந்தது?
என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது. இந்த புத்தாண்டு, எனக்கு பல புதிய வாய்ப்புகளை தரும் என, நம்புகிறேன். அண்ணனுக்கு ஜே என்ற படம், விரைவில் வெளியாக உள்ளது. இது, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள படம். இதுதவிர, இன்னும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன.
யாரையாவது காதலிக்கிறீர்களா?