ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வாகி அனுப்பி வைக்கப்பட்ட ஹிந்திப் படம் நியூட்டன். கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்தப் படத்தை அமித் வி.மசூர்கர் இயக்கி இருந்தார். ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, அஞ்சலி பாட்டில், ரகுபிந்தர் யாதவ் நடித்திருந்தனர். த்ரிஷ்யம் பிலிம்ஸ் சார்பில் மனீஷ் முந்த்ரா தயாரித்திருந்தார். இது ஒரு கிராமத்திற்கு தேர்தல் அதிகாரியாக செல்லும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்னைகள் பற்றிய படம்.
இந்தப்படம் வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்டது. எல்லோரும் எதிர்பார்த்த பாகுபலி இரண்டாம் பாகம் பின்னுக்கு தள்ளப்பட்டது. நியூட்டன் உள்பட 80க்கும் மேற்பட்ட உலக படங்கள் இந்த பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது ஆஸ்கர் விருது கமிட்டி, இவற்றிலிருந்து போட்டிக்கு 9 படங்களை தேர்வு செய்துள்ளது. அதில் நியூட்டன் இடம்பெறவில்லை. இதனால் நியூட்டன் ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறியது.
எ பெண்டாஸ்டிக் வுமன் (சிலி), இன் தி பேட் (ஜெர்மன்), ஒண் பாய் அண்ட் சோல் (ஹங்கேரி), பாக்ஸ்ட்ரோ (இஸ்ரேல்), தி இன்சல்ட் (லெபனான்), லவ்லெஸ் (ரஷியா), பெலிசிட் (செனகல்), தி வவுண்ட் (தென்கொரியா), தி செக்யூர் (ஸ்வீடன்) ஆகிய 9 படங்கள் இறுதி சுற்றில் தேர்வாகி உள்ளன.