டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை ராணி முகர்ஜி நடித்துள்ள ஹிச்கி படத்தின் டிரைலர் டிசம்பர் 19ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. டைரக்டர் சித்தார்த் பி.மல்கோத்ரா இயக்கி உள்ள இப்படத்தை மனீஷ் சர்மா தயாரித்துள்ளார். ஹிச்கி படத்தின் டிரைலர், சல்மான் கான் நடித்துள்ள டைகர் ஜிந்தா ஹை படத்துடன் சேர்த்து வெளியிடப்பட உள்ளதாம்.
ஹிச்கி படம் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் இருக்கும் எனவும், இது இந்தியா முழுவதுடனும் தொடர்புடைய கதை எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியையும் ஏற்படும் கதை. மனிதர்களின் நம்பிக்கையையும், ஆற்றலையம் கொண்டது தான் இப்படத்தின் கதை என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.