ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் நீரஜ் வோரா. குஜராத்தை சேர்ந்த இவர் பாலிவுட்டில் 1984ம் ஆண்டு ஹோலி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு ரங்கீலா, சத்யா, மான், மஸ்த், புக்கர், கம்பெனி, பிலிமிவாலா, போல் பச்சன், வெல்கம் பேக் உள்பட 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கில்லாடி 420, பிலிமிவாலா, ரன் போலா ரன் உள்பட 6 படங்கள் இயக்கி உள்ளார்.
54 வயதாகும் நீரஜ்வோரா கடந்த ஆண்டு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மும்பை அந்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஒரு கட்டத்தில் கோமா நிலைக்கு சென்றார். 13 மாதங்களாக கோமாவில் இருந்த அவர் நேற்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு ரோகித் ஷெட்டி, பரேஷ் ராவல் உள்ளிட்ட ஹிந்தி திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள். குஜராத்தை சேர்ந்த இவருக்கு பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.