அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவரான அனுஷ்கா சர்மாவுக்கும் நேற்று இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. திருமணம் பற்றிய தகவல்களை ரகசியமாகக் காத்து வந்த அவர்கள், நேற்று இரவு அவர்கள்து திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள், சில குடும்ப நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டதாகத் தெரிகிறது. அவர்களின் திருமண வரவேற்பிற்கு திரையுலகத்தினரையும், கிரிக்கெட் வீரர்களையும் அழைக்க உள்ளார்களாம். அதற்கான அழைப்பிதழும் தயாராகியுள்ளது. வரும் டிசம்பர் 21ம் தேதி டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இரவு 8.30க்கு மணிக்கு திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.
டில்லியில் நடைபெறும் திருமண வரவேற்பிற்குப் பிறகு அடுத்து டிசம்பர் 26ம் தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு நடக்கும் எனத் தெரிகிறது. விராட் கோலி, அனுஷ்கா இருவரும் மும்பை, வொர்லி பகுதியில் புதிய வீட்டிற்குக் குடி புக உள்ளார்களாம்.