ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2.O, பேடுமேன் என அடுத்தடுத்து இரண்டு படங்களை முடித்த அக்ஷ்ய், இப்போது தான் நடித்து வந்த மற்றொரு படமான கோல்டு-யையும் முடித்துள்ளார். இந்தியா சுதந்திர பெற்ற பின்னர் 1948-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் பெற்ற முதல் தங்கப்பதக்கத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. அக்ஷ்ய் ஜோடியாக மவுனி ராய் நடிக்க, ரீமா காக்தி இயக்குகிறார். எக்சல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளது.
இதை மகிழ்ச்சியோடு வீடியோ வடிவில் தன் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோவில், நாற்காலியிலிருந்து குதித்தும், கடற்கரை மணலில் வால்ட் அடித்தும் நல்ல துவக்கம், நல்ல முடிவு, கோல்டு படக்குழுவுடன் பணியாற்றியது. படப்பிடிப்பு முடிந்தது என்று கூறியுள்ளார்.
கோல்டு படம் அடுத்தாண்டு ஆக்ஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தில் ரிலீஸாகிறது.