ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
புக்ரே படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான புக்ரே ரிட்டர்ன்ஸ் உருவாகி நேற்று வெளியாகி உள்ளது. புல்கிட் சர்மா, ரிச்சா சத்தா, அலி பாசல், வருண் சர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி உள்ள இப்படத்தை மிர்க்தீப் சிங் லம்பாவே இயக்கி உள்ளார்.
முதல்பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் கலகலப்பாக செல்வதால் ரசிகர்களை இப்படம் கவர்ந்துள்ளது. அதனால் படத்தின் வசூல் சிறப்பாக உள்ளது. முதல்நாளிலேயே இப்படம் ரூ.8.10 கோடி வசூலித்திருக்கிறது.
சுமார் ரூ.30 கோடி பட்ஜெட்டில் வெளிவந்த புக்ரே ரிட்டர்ன்ஸ் படம் 1500 தியேட்டர்களில் ரிலீஸாகி உள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் இன்னும் இரு தினங்களில் போட்ட முதலை நெருங்கிவிடும் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.