பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
காமெடி நடிகர் கபில் சர்மா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் பிராங்கி. கபில் ஜோடியாக இஷிதா தத்தா நடித்திருந்தார். பிரிட்டீஷ் இந்தியா காலத்தில் நடக்கும் கதை போன்று வெளிவந்த இப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிராங்கி படம், 1500 தியேட்டர்களில் ரிலீஸானது. ஆனால் படம் மூன்று நாட்களில் ரூ.2.10 கோடி, ரூ.2.30 கோடி மற்றும் ரூ.2.80 கோடி என ரூ.7.20 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. டில்லி மற்றும் கிழக்கு பஞ்சாப்பில் கபிலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் அங்கு படம் ஓரளவுக்கு வசூலித்திருக்கிறது. ஆனால் பஞ்சாபி படங்களை விட வசூல் குறைவு தான். இந்தவாரம் முழுக்க ஓடினால் கூட படம் அசலை கூட தொடுவது கஷ்டம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.