‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் சசி கபூர் காலமானார். அவருக்கு வயது 79. வயது மூப்பு மற்றும் நாள்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவரது உயிர் பிரிந்தது.
கபூர் குடும்பத்தில் இருந்து வந்த சசி கபூர், 1938ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி பிறந்தார். பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து, திரையுலகில் முடிசூடா மன்னனாக இருந்தார். இவர் நடித்த தீவார்(1975), சத்யம் சிவம் சுந்தரம்(1978), ஜூனூன்(1978) ஷான்(1980) நாமக் ஹலால்(1982) ஆகிய திரைப்படங்கள் மூலம் பாலிவுட்டில் பெரும் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். நடிப்பு மட்டுமின்றி, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார்.
உலக புகழ்பெற்ற இந்திய நடிகர்களில் ஒருவரான சசிகபூர் 160 படங்களில் நடித்துள்ளார். இவர் இதுவரை 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். இவரது நடிப்புத்திறனை அங்கீகரித்த இந்திய அரசு 2015ம் ஆண்டு பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தது. மேலும் இவர் 2015-ம் ஆண்டு திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதும், 2010ம் ஆண்டு பிலிம்பேரின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் மட்டுமன்றி பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.