Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வெற்றிக்கான அழுத்தம் என்னுள் இல்லை : கபில் சர்மா

30 நவ, 2017 - 13:57 IST
எழுத்தின் அளவு:
There-is-not-much-pressure-on-me-about-the-success-of-film---Kapil-Sharma

டிவி., நிகழ்ச்சிகளில் காமெடி ஷோ நடத்தி வந்தவர் கபில் சர்மா. "கிஸ் கிஸ்கோ பியார் கரூன்" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. தற்போது இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் "பிராங்கி". இப்படம் பற்றியும், தன்னைப்பற்றியும் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட விஷயங்களை இனி பார்ப்போம்...

பிராங்கியில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்?
மங்கா என்ற ரோலில் நடிக்கிறேன். கதை ஆங்கிலேயர்கள் காலத்தில் நடக்கிறது. பெராம்பூர் என்ற குக்கிராமத்தில் வாழும் சாதாரண இளைஞன். எப்போதும் நேர்மையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பவன். நான்காவது வரை படித்திருப்பதால் பிரிட்டீஷ் போலீசில் இணைய முற்பட்டு, அதில் தோல்வியை தழுவியவன். மங்காவிற்குள்ளும் ஒரு காதல் பிறக்கிறது. அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதையை காமெடியுடன் கொஞ்சம் சிரீயஸையும் கலந்து சொல்கிறோம்.

பிராங்கி காமெடி படம் போன்று தெரியவில்லையே?
ஆமாம், பிராங்கி காமெடி படம் கிடையாது. ஆனால் படத்தில் நிறைய இடங்களில், ரசிகர்கள் சிரித்து மகிழும் வகையான காமெடி காட்சிகள் இருக்கும். படத்தில் எல்லா விதமான அம்சங்களும் இருக்கும். காமெடி என்பது எளிதான விஷயம் அல்ல, மிகவும் கஷ்டமான ஒன்று.

இந்தப்படத்தில் உங்கள் அம்மா, சகோதரி எப்படி நடித்தார்கள்?
நான் தான் இப்படத்தின் தயாரிப்பாளர். படப்பிடிப்பு தளத்திற்கு எப்போதும் அம்மா வருவார். ஒருநாள் ஷூட்டிங்கின்போது இன்றைக்கு என்ன காட்சி என்று கேட்டார், திருமணம் காட்சி என்றேன். அப்படியானால் நானும் நடிக்கிறேன் என்றார், எனக்கும் அது நல்ல விஷயமாக தெரிந்தது. அப்படியே என் சகோதரியையும் அம்மாவுடன் இணைந்து நடிக்க வைத்தேன். பஞ்சாபி திருமண முறையை என் அம்மாவை விட வேறு யாராலும் சிறப்பாக நடத்த முடியாது.

நீங்கள் தான் தயாரிப்பாளர் என்பதால் எந்தளவுக்கு வெற்றி என்ற அழுத்தம் உள்ளது?
அந்தமாதிரி எதுவும் இல்லை. உளப்பூர்வமாக இந்தபடத்தை எடுத்துள்ளேன், ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். படம் பார்க்க செல்லும் ரசிகர்களின் முகத்தில் புன்னகை இருக்க வேண்டும். கஷ்டப்பட்டு உழைத்து தான் பணம் சம்பாதிக்கிறேன். அதனால் பணத்தின் அருமை எனக்கு தெரியும். ரூ.100 கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்கள் திருப்தியடைய வேண்டும், அதுவே என் எண்ணம், அதுவே மகிழ்ச்சி.

உங்க சினிமா பயணம் பற்றி சொல்லுங்க?
காமெடியனாக வேண்டும் என்று ஒருபோதும் நான் எண்ணியது இல்லை. 1997-ல் அமிர்தரஸில் சிறிய அளவில் நடிக்க தொடங்கினேன். அதன்பின்னர் நாடகங்களில் நடித்தேன். 2005-ம் ஆண்டு கிரேட் இந்தியன் சேலன்ஞ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். முதல்சீசனில் தேர்வாகவில்லை. மூன்றாவது சீசனில் தான் தேர்வானேன். அதன்பின்னர் 6 ஆண்டுகள் காமெடி நிகழ்ச்சிகள் நடத்தினேன். காமெடி நைட்ஸ் விதி கபில் ஷோ, மேலும் பிரபலமாக்கியது. அப்படியே படிப்படியாக வளர்ந்து கிஸ் கிஸ்கோ பியார் கரூன் படத்தில் நடித்தேன். இப்போது பிராங்கியில் நடித்திருக்கிறேன். இதுதான் என் சினிமா பயணம்.

உங்க வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாக கருதுவது?
இன்றைக்கு நாட்டின் எந்த முனைக்கும் நான் சென்றாலும் அங்குள்ளவர்களின் வீட்டு கதவை தட்டி, உணவு தாருங்கள் என்றால் நிச்சயம் என்னை அடையாளம் கண்டு உணவளிப்பார்கள். இதையே பெரிய சாதனையாக கருதுகிறேன். ஒருவேளை அவர்களுக்கு அடையாளம் தெரியாவிட்டால் கூட என்னைப்பற்றி விளக்கி அவர்களை புரிய வைப்பேன்.

Advertisement
அமீர்கான் உடன் நடிக்க ஆசைப்படும் உலக அழகிஅமீர்கான் உடன் நடிக்க ஆசைப்படும் ... என்னுடைய குழந்தைகள் தான் என் ஆசிரியர் : கஜோல் என்னுடைய குழந்தைகள் தான் என் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in