ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரெமோ டிசோசா இயக்கத்தில் சல்மான் கான் ஒரு படத்தில் நடிக்க உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக இப்படத்தில் சல்மான் கான் மாற்றப்பட்டு வருண் தவான் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் இதை ரெமோ டிசோசா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முற்றிலும் பொய்யான செய்தி. யார் இது போன்ற செய்தியை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.
தற்போது நான் ரேஸ் 3 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளேன். இந்தப்படத்தில் எந்த மாற்றமும் இல்லை. நான் சல்மான் உடன் படம் பண்ணுகிறேன். சல்மான் எல்லா தலைமுறையினருடன் பயணிப்பவர். அவரை வைத்து நடனம் சம்பந்தப்பட்ட கதையை இயக்கலாம் என்று எண்ணியுள்ளேன். நிச்சயம் அது நடக்கும். எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் உள்ளது என்று கூறியிருக்கிறார்.