இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ள ஆயர்ரி படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. முன்னதாக இப்படம் ஜனவரி 26 அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம்.
ஆயர்ரி படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 26 ம் தேதி தேதி ரிலீஸ் செய்யவே படக்குழு முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால் ரஜினிகாந்தின் ராபட் 2.0 படத்துடன் மோதாமல் இருப்பதற்காக படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 9 ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும், முதலில் திட்டமிட்டபடி ஜனவரி 26 ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்யலாம் என படக்குழு முடிவு செய்துள்ளது.
ஆனால் தற்போது மாற்றப்பட்டுள்ள தேதியில் அக்ஷய் குமார் நடித்துள்ள பத்மன் படம் ரிலீசாக உள்ளது. இதனால் ஜனவரி மாதத்தில் ஆயர்ரி படம், பத்மன் படத்துடன் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.