Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

அரவிந்த்சாமியுடன் நிறைய விஷயங்களை டிஸ்கஸ் பண்ணுவேன்! : அமலா பால்

17 நவ, 2017 - 00:53 IST
எழுத்தின் அளவு:
I-will-discuss-more-with-Aravindswamy-says-Amala-paul

தமிழ் நடிகையரில் வெகு சிலர் மட்டுமே, எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக கடந்து, அடுத்தடுத்த நிலைக்கு தன்னை ஆட்படுத்தி கொள்வர். அந்த வகையில், தன்னை பற்றி வரும், காதல் முதல், கார் விமர்சனம் வரை, எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர், அமலாபால். அவர் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திருட்டுப் பயலே - 2 பற்றியும், தன்னைப் பற்றியும், அவர் பேசுகிறார்:

திருட்டு பயலே - 2வில் உங்க ரோல்?


இந்த படத்தில், என் கேரக்டர் பெயர் அகல்விளக்கு. மூக்குத்தி, பாவாடை, தாவணி, புடவையில் வரும், அம்சமான காரைக்குடி பெண்ணாக இதில் நடித்துள்ளேன். வசிக்கும் வீடு முதல், கட்டும் புடவை வரை, எல்லாவற்றையும், கலர் புல்லாக வைத்துக் கொள்ள விரும்பும் கேரக்டராக நடித்து உள்ளேன். சமூக வலைதளங்களில், பிசியாக இருக்கும் பலரது வாழ்க்கையை, ஒளிவு மறைவில்லாமல் சொல்லும் படமாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் படமாகவும் இது இருக்கும். இதை, குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, அனைவரும் பார்க்கும் படமாக, சுசி கணேசன் இயக்கியுள்ளார்.


இந்த படத்துக்காக மூக்குத்தி குத்தி, உங்க மூக்கே புண்ணாகி விட்டதாமே?


எந்த படத்தில் நடித்தாலும், நம், லுக் கொஞ்சம் புதிதாக இருக்க வேண்டுமென நினைப்பேன். அதுபோல், இந்த படத்தில் வரும் அகல் விளக்கு கேரக்டருக்கு, மூக்குத்தி அணிந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து, நானே எடுத்த முடிவு தான், அது. மூக்கு குத்தியதில், சிறிய காயம் ஏற்பட்டு, அப்புறம் சரியாகி விட்டது. இந்த படத்துக்காக, சொந்த குரலில் பேசியுள்ளேன்.


உங்கள் விருப்பமான உணவு?


எந்த உணவுமே, அம்மா கையில் சாப்பிடுவது மாதிரி வராது. வெளியூர் படப்பிடிப்புகளில் இருக்கும்போது, வீட்டுச் சாப்பாட்டை ரொம்பவே, மிஸ் பண்ணுவேன். சென்னைக்கு வந்தால், கட்டாயம், பொங்கலை விரும்பிச் சாப்பிடுவேன்.


மைனா அமலாபால், இப்போது கிளாமருக்கு மாறியது ஏன்?


எல்லாருமே, மைனாவைத் தான், மனதில் வச்சிருப்பாங்க. அந்தகேரக்டருக்காக, நான், மைனாவாகவே மாறி விட்டேன். ஆனால், என்னுடைய திரை வாழ்வில், தற்போதைய காலத்தை, சிறந்த காலமாக கருதுகிறேன். உடலை கட்டுக் கோப்பாக வைக்க, உடற்பயிற்சி, யோகா செய்கிறேன். யோகா இல்லாமல், என்னால், சந்தோஷமாக இருக்க முடியாது.


படப்பிடிப்பில் உங்கள் செயல்பாடு?


ஓர் உதவி இயக்குனரைப் போல், எல்லா வேலைகளையும் தெரிஞ்சுக்க ஆசைப்படுவேன். கதை, எடிட்டிங், இயக்கம் என, எல்லா வேலைகளையும் கவனிப்பேன். விரைவில், ஓர் இசை ஆல்பம் வெளியிடும் ஐடியாவும் இருக்கு.


அரவிந்த் சாமியுடன் நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் பற்றி?


எனக்கு, சமீபத்தில் கிடைத்த நல்ல நண்பர் அரவிந்த்சாமி. நிறைய விஷயங்களை அவருடன், டிஸ்கஸ் பண்ணுவேன். பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஒரு ஜாலியான படம். இந்த படத்தில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன்.


சிகரெட் பிடித்த வீடியோ உண்மையா?


நான் வெளியூரில் இருக்கும்போது, இதுபற்றி எனக்கு தகவல் கிடைத்தது. ஒரு மலையாள படத்தில், சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இருந்தது. அதை எடுத்துப் போட்டு, ஏதேதோ மாற்றங்கள் செய்து, அதை வைரலாக்கிட்டாங்க. கோபம் கோபமாக வந்தது. ஆனால், என்ன செய்ய முடியும்?


பெண்களை மையப்படுத்தி வரும் கதைகள் வெற்றி பெறுகின்றனவே?


நல்ல விஷயம் தானே. சமீபத்தில் வந்த அறம் படத்தை, எல்லாரும் பாராட்டுகின்றனர். நான் கூட, இந்த மாதிரி சமூக பிரச்னையை மையமாக வைத்து, அதே அந்த பறவை என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடிக்கிறேன்.


கார் விஷயத்தில் என்ன தான் நடந்தது?


அது என்னவோ, நான் யார்கிட்ட கார் விஷயத்தை சொன்னாலும், அது வேறு விதமாக செய்தியாகிறது. அதனால் தான், சமூக வலைதளங்களில் எல்லாருக்கும் செய்தி அனுப்பியுள்ளேன். நேரம் வரும்போது, இதுபற்றி நிறைய பேசுவேன்.


பிடித்த நடிகர்கள்?


விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன். இரண்டு பேருமே, நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கின்றனர். அவர்களுக்கு ரசிகர்களும் அதிகமாக உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - சிலிர்க்கிறார் மகேந்திரன் 'மாஸ்டர்' ஒரு மைல்கல்! - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in