600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ரோகித் ஷெட்டி இயக்கத்தில், கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமாக தீபாவளிக்கு வெளியான படம் கோல்மால் அகைன். அஜய் தேவ்கன், அர்ஷத் வர்சி, துஸார் கபூர், குணால் கேமு, ஸ்ரேயால் தல்பதே, தபு, பரிணிதி சோப்ரா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் வசூலும் சிறப்பாக இருந்தது. இந்தியாவில் மட்டும் ரூ.200 கோடியும், உலகளவில் ரூ.100 கோடியும் வசூலித்து உலகளவில் ரூ.300 கோடி வசூலித்திருக்கிறது. காமெடி படங்களின் வரிசையில் அதிக வசூலை குவித்த படம் இது என்கிறார்கள். அதோடு இந்தியாவில் ரூ.300 கோடி வசூலித்த டாப் 10 படங்களில் இந்தப்படமும் இணைந்துள்ளதாக பாலிவுட் விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.