ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படம் கடும் எதிர்ப்புக்களை மீறி டிசம்பர் 1 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ஷாகிர் லூதியான்வி இயக்கும் வாழ்க்கை படம் ஒன்றில் நடிப்பதற்காக தீபிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், அப்படத்தில் அமிர்தா பிரிதம் வேடத்தில் தீபிகா நடிக்க உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இந்த தகவலை தீபிகா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இது போன்ற யூக செய்திகளில் என் பெயர் பயன்படுத்தப்படுவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. அமிர்தா வேடத்தில் நடிக்க என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றார். இதற்கு முன் இப்படத்தில் அமிர்தா வேடத்தில் நடிப்பதற்காக நடிகை பிரியங்கா சோப்ராவிடம் படக்குழுவினர் பேசினார்களாம். ஆனால் பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருவதால், அதன் வேலை காரணமாக இப்படத்தில் நடிக்க முடியாது என கூறி விட்டாராம்.