Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பத்மாவதி யார் மனதையும் புண்படுத்தாது: சஞ்சய் லீலா பன்சாலி அறிக்கை

12 நவ, 2017 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Sanjai-leela-bansali-gave-a-statement-on-Padmavathi

பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ள படம் பத்மாவதி. முகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி, ராஜபுதனத்து சித்தூர் மகாராணி பத்மாவதி ஆகியோரின் வரலாற்று கதை. பத்மாவதியாக தீபிகா படுகோனேவும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர்சிங்கும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பத்மாவதி தவறாக சித்தரிக்கப்படுவதாக படத்துக்கு ராஜபுதனத்து சமூகத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். படப்பிடிப்பின் போது தாக்குதல் நடத்தினர். படத்தை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்க தொடர்ந்தனர். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தடைகளை தாண்டி படம் வருகிற டிசம்பர் 1ந் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி வீடியோவில் பேசி அதை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்வதாவது:

வணக்கம். சஞ்சல் லீலா பன்சாலி ஆகிய நான் இந்த வீடியோ மூலம் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். பத்மாவதி படத்தை அதிக பொறுப்புடனும், முயற்சிகளுடனும், நேர்மையுடனும் எடுத்துள்ளேன். ராணி பத்மாவதியின் கதை எப்போதுமே எனக்கு உந்துதலாக இருந்திருக்கிறது. இந்தப் படம் அவரின் துணிச்சலையும், தியாகத்தையும் போற்றுகிறது. ஒரு சில வதந்திகளின் காரணத்தால், இந்தப் படம் விவாதத்துக்குரியதாக மாறிவிட்டது.


படத்தில் ராணி பத்மாவதிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் கனவுப் பாடல் இருப்பதாக வதந்தி உருவாகியிருக்கிறது. இதை நான் முன்னமே மறுத்திருந்தேன். அதற்கான எழுத்துப்பூர்வமான சாட்சியையும் காட்டிவிட்டேன். இன்று, இந்த வீடியோ மூலம் அதை மீண்டும் உறுதி செய்கிறேன். படத்தில் மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துமாறு ராணி பத்மாவதிக்கும் அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே எந்த விதமான காட்சியும் இல்லை.


ராஜபுதனத்தின் கண்ணியத்தையும், மரியாதையையும் மனதில் வைத்தே இந்தப் படத்தை நாங்கள் பொறுப்புடன் உருவாக்கியுள்ளோம். படத்தில் மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துமாறு ராணி பத்மாவதிக்கும் அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே எந்த விதமான காட்சியும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நன்றி. இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.


Advertisement
மும்பை தியேட்டர்களில் விசிட் அடித்த பார்வதிமும்பை தியேட்டர்களில் விசிட் அடித்த ... அம்ரிதா வேடத்தில் நடிக்கிறேனா? தீபிகா அம்ரிதா வேடத்தில் நடிக்கிறேனா? ...


வாசகர் கருத்து (2)

chennai sivakumar - chennai,இந்தியா
12 நவ, 2017 - 20:44 Report Abuse
chennai sivakumar It is a very tough assignment to produce a historic movie. The team has to do lot of research on various aspects. Even with that the commercial viability is uncertain. Heavy cost of production and financial risk involved. Without realising the hurdles people are sitting and making protests
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Traffic Ramasamy
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in