‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கும் படம் சங்கமித்ரா. ஜெயம்ரவி-ஆர்யா நாயகர்களாக நடிக்கயிருக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கயிருந்தார். பாகுபலி போன்ற சரித்திர கால படம் என்பதால் அவருக்கு வாள் சண்டை, கத்தி சண்டை பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. பின்னர் கேன்ஸ் திரைப்படவிழாவில் நடைபெற்ற சங்கமித்ரா பர்ஸ்ட் லுக் வெளியீட்டிலும் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார்.
ஆனால் பின்னர் சில காரணங்களை சொல்லிக்கொண்டு அந்த படத்தில் இருந்த ஸ்ருதிஹாசன் விலகி விட்டார். அதனால் உடனடியாக நடைபெற இருந்த சங்கமித்ரா படப்பிடிப்பு தாமதமானது. மேலும், அனுஷ்கா, நயன்தாரா உள்பட பல நடிகைகளிடம் கால்சீட் கேட்கப்பட்டு வந்த நிலையில், இந்தி நடிகை திஷா பதானியை பின்னர் ஒப்பந்தம் செய்தனர். அந்த தகவலை தற்போது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமா ருக்மணி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.