ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோரை வைத்து டைரக்டர் ஷங்கர் இயக்கி உள்ள படம் 2.0. இப்படத்தை ஜனவரி மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் மிக பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இசை வெளியீட்டு விழாவை துபாயில் நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட ஷங்கர், தற்போது இவ்விழா அக்டோபர் 27 ல் நடக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியும் நடக்கும் என அறிவித்துள்ளார். 6
இவ்விழாவில் 6 பேர் அமரக்கூடிய மேஜைக்கு ரூ. 3719515, 8 பேர் அமரக்கூடிய மேஜைக்கு ரூ. 469588, 12 பேர் அமரக்கூடிய மேஜைக்கு ரூ. 682232 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவுக்கான அதிகாரப்பூர்வ இணையத் தளத்திலும் இதனை வெளியிட்டுள்ளனர்.