மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சைலேந்திர சிங் தயாரிக்கும் படம் ஷேர் சிங். இப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார் என கூறப்பட்டு வந்தது. இது சூப்பர் ஹீரோ பற்றிய படம் என கூறப்பட்டது.
இத்தகவலை உறுதி செய்துள்ள தயாரிப்பாளர் சைலேந்திர சிங் கூறுகையில், பாலிவுட்டில் சூப்பர்ஹீரோ படம் எடுக்கப்படுவதில்லை. ஷேர் சிங் அந்த வகையான கேரக்டர் கொண்ட படம். ஷேர் சிங் கதாபாத்திரம் சூப்பர்பவர் ஏதும் கொண்டவர் இல்லை. ஆனால், அபரிமிதமான ஆற்றல் கொண்ட மனிதர். இப்படத்தில் ஷேர் சிங் வேடத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்கு ஏற்றவர் என நான் தேர்வு செய்த முதல் நபர் ரன்வீர் தான் என்றார்.
நடிகர் ரன்வீர் சிங் தற்போது பத்மாவதி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படம் வரும் டிசம்பர் 1 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.