ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கேரளாவில் உள்ள அரசியல்வாதிகளில் அதிக அளவு திரையுலகில் ஈடுபாடு காட்டுபவரும், அதேசமயம் திரையுலகம் பற்றி சர்ச்சையான கருத்துக்களை தெரிவிப்பதிலும் முதன்மையானவர் தான் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ்.. கேரளாவில் பூஞ்சூர் தொகுதியில் இருந்து தொடர்ந்து ஆறுமுறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட இவர் சமீபத்தில், நடிகர் திலீப்பிற்கு ஆதரவாக, அதேசமயம் பாதிக்கப்பட்ட நடிகைக்கு எதிராக சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்..
இவரைப்பற்றிய தற்போதைய லேட்டஸ்ட் விஷயம் என்னவென்றால் ஆறுமுறை எம்.எல்.ஏவான இவருக்கு ஜெயராம் மூலம் கேரளாவின் முதல் மந்திரியாகும் யோகம் தேடிவந்துள்ளது. உண்மைதான்.. நடிகர் சலீம் குமார் இயக்கத்தில் ஜெயராம் நடிக்கும் புதிய படமான 'தெய்வமே கைதொழாம் கே குமாரகானம்' என்கிற படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கிறார் பி.சி.ஜார்ஜ். ஏற்கனவே தான் நடித்த 'அச்சாயன்ஸ்' படத்தில் இவரை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்த ஜெயராம், இந்தப்படத்திலும் நட்புக்காக பி.சி.ஜார்ஜுக்கு இந்த சி.எம் கேரக்டரை வாங்கி கொடுத்துள்ளாராம்.