இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடன இயக்குனர் பாபா சங்கர், இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள படம் 'குப்பத்துராஜா' . ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக பாலக் லால்வானி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தனுஷ், ஜி.வி.பிரகாஷ் இருவருக்கும் நீண்டகாலமாகவே ஏழாம் பொருத்தம். அப்படியிருந்தும், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'குப்பத்துராஜா' படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனுஷ் வெளியிட்டுள்ளார். இருப்பினும் தனுஷ், தனது டுவிட்டரில் ஜிவி பிரகாஷ் பெயரை குறிப்பிடவில்லை, அதேப்போன்று ஜிவியும், தனுஷை பெயரை தன் டுவிட்டரில் குறிப்பிடவில்லை. இருவரும் இன்னும் எலியும், பூனையுமாக தான் இருக்கிறார்கள்.
குப்பத்து கதையை வைத்து நிறைய படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இது முற்றிலும் வித்தியாசமான கதை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.