எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
தமிழ் சினிமாவில், ஒரு ஹீரோவின் படத்தின் போஸ்டரை, டீசரை, டிரைலரை இன்னொரு ஹீரோ வெளியிடுவது தான் இப்போதைய டிரென்ட். எந்த பரபரப்பும் இல்லாமல் டுவிட்டரில் வெளியிட்டுவிட்டு போய்க் கொண்டேயிருப்பார்கள்.
அப்படித்தான் நேற்று, ஜி.வி.பிரகாஷ் நடிக்க நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்குனராக அறிமுகமாகும் 'குப்பத்து ராஜா' படத்தின் முதல் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.
அவருடைய டுவீட்டில், “என்னுடைய நண்பர், நடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறிய பாபா பாஸ்கரின் 'குப்பத்து ராஜா' முதல் பார்வை” என்று மட்டுமே தனுஷ் குறிப்பிட்டிருந்தார். தப்பித் தவறிக் கூட ஜி.வி. பிரகாஷ் பெயரை தனுஷ் குறிப்பிடவில்லை.
படத்தின் போஸ்டரை தனுஷ் வெளியிட்டதும், படத்தின் நாயகன் ஜி.வி. பிரகாஷ், “பாபா பாஸ்கரின் 'குப்பத்து ராஜா' முதல் பார்வை” என்று அவரும் முதல் போஸ்டரை டுவீட் செய்திருந்தார். ஜி.வி. பிரகாஷும் முதல் பார்வையை வெளியிட்ட தனுஷுக்கு நன்றி என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.
தனுஷுக்கும், ஜி.வி. பிரகாஷுக்கும் இடையே இருக்கும் சண்டை திரையுலகம் அறிந்த ஒன்று. தனுஷ் ஒரு கட்டத்தில் தன்னை அவமானப்படுத்தியதால்தான் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் முடிவுக்கு வந்தார் என்று பலரும் சொல்வார்கள். அப்படியிருக்க நேற்று இரண்டு பேரும் நன்றிக்குக் கூட ஒருவர் மற்றவரை குறிப்பிடாமல் இருக்கும் அளவிற்கு அப்படி ஒரு வெளியீடு ஏன்?.