டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'மெர்சல்' படத்தின் ஒரு வரிக் கதை கமல்ஹாசன் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' படம், விஜயகாந்த் நடித்த 'ரமணா' படம் உட்பட பல படங்களை ஞாபகப்படுத்துவதாக அனைவருமே சொல்லி வருகிறார்கள்.
'சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, சென்னை 28 பார்ட் 2' ஆகிய படங்களை இயக்கிய வெங்கட் பிரபு, 'மெர்சல்' படத்தைப் பற்றி “மெர்சல், விசேஷ நாள் ட்ரீட், அட்லீயால் அற்புதமாக தழுவி, வழங்கப்பட்டுள்ளது, என்ன ஒரு தயாரிப்பு, பஞ் சாருக்கு கிரெடிட்,” என டுவீட் செய்துள்ளார்.
வெங்கட் பிரபுவின் இந்த டுவீட்டைப் பார்த்து விஜய் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் கொதித்துப் போய்விட்டார்கள். ஆங்கிலப் படங்களைத் தழுவி படம் எடுக்கும் வெங்கட் பிரபு அவருடைய படங்களுக்காக யாருக்கு இதுவரை கிரெடிட் கொடுத்துள்ளார் என அவரை கண்டபடி திட்டி பதிலடி கொடுத்துள்ளார்கள்.
மேலும், வெங்கட் பிரபுவும், அவருடைய தம்பி பிரேம்ஜியும் அவர்களை எப்போதுமே அஜித் ரசிகர்களாகத்தான் காட்டிக் கொள்வார்கள். 'மங்காத்தா' படத்தை இயக்க வெங்கட் பிரபுவுக்கு அஜித் வாய்ப்பு கொடுத்த பிறகே அவரையும் ஒரு இயக்குனர் என்று சிலர் ஒத்துக் கொண்டார்கள். அதனால், வெங்கட் பிரபு எப்போதுமே விஜய்யைப் பற்றி இப்படிப் பேசுவது ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறியுள்ளார்கள்.
வெங்கட் பிரபு தற்போது எடுத்து வரும் 'பார்ட்டி' படமும் 'ஹேங் ஓவர்' படத்தின் தழுவல் தான் என்று ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன. “ஒரு காப்பியே இன்னொரு காப்பியைக் குறை சொல்கிறதே,” என ரசிகர்கள் கவிதை வாசிக்கும் அளவிற்கு போய்விட்டார்கள்.