நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ரஜினிகாந்த், அஜித், விஜய் நடிக்கும் படங்கள் வெளிவந்த மறுநாளே படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்று ஒரு தகவல் பரவி விடும். ஒவ்வொருவரும் இத்தனை கோடி, அத்தனை கோடி என்று அதிகாரப்பூர்வமில்லாத ஒரு எண்ணிக்கையைச் சொல்வார்கள். இருந்தாலும் திரையுலகத்தில் உள்ள சிலர் ஒரு கணக்கை வைத்து இவ்வளவு வசூலாகும் என்று ஒரு தோராய கணக்கைச் சொல்வார்கள்.
முதல் நாளில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட கணக்கும், விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் கணக்கும் சேர்ந்து ஒரு வசூல் தொகையைக் கொடுக்கும் இதுதான் வசூலை, அப்படி இப்படி கணக்கிடும் முறை. அதிகாரப்பூர்வமாக தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் இத்தனை கோடி வசூலித்தது என்று சொல்ல மாட்டார்கள், சொல்லவும் மாட்டார்கள்.
நாம் பட வெளியீட்டிற்கு முன்பே சொன்ன ஒரு தோராய கணக்குக்கு நெருக்கமாக இப்போது முதல் நாள் வசூல் இருப்பதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் சுமார் 25 கோடி வசூலித்துள்ளது என்கிறார்கள். கேரளாவில் மலையாளப் படங்கள் வசூலித்ததை விட 'மெர்சல்' சுமார் 6 கோடி வரை வசூலித்திருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கர்நாடகா மற்றும் இதர மாநிலங்களில் சுமார் 5 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 12 கோடி ரூபாய் வரையிலும் வசூலித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. ஆக, முதல் நாளில் மொத்தமாக 48 கோடி வரை வசூலித்துள்ளதாக கணக்கு சொல்கிறார்கள்.
அது மட்டுமல்ல, 'மெர்சல்' படம் சில முதல் நாள் சாதனைகளையும் படைத்துள்ளதாம். கேரளாவில் அதிக வசூலைப் பெற்ற முதல் படம், சென்னையில் அதிக வசூலைப் பெற்ற முதல் படம், இங்கிலாந்தில் அதிக வசூலைப் பெற்ற முதல் தமிழ்ப் படம், பிரான்ஸ் நாட்டில் முதல் நாளில் அதிகம் பேர் பார்த்த தமிழ்ப் படம், அமெரிக்காவில் வார நாட்களில் வெளியாகி அதிக வசூலைப் பெற்ற முதல் தமிழ்ப் படம், விஜய்க்கு இந்தியாவில் அதிக முதல் நாள் வசூலைப் பெற்றுத் தந்த முதல் படம் என சில 'முதல்' விஷயங்களைப் பட்டியலிடுகிறார்கள்.