Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மோடி முதல் ரஜினி வரை அரசியல் பேசும் படம்

20 அக், 2017 - 10:36 IST
எழுத்தின் அளவு:
Vengat-Subramani-mike-testing-1-2-3-movie-to-speak-about-political-issue

சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் என்பவர் தயாரித்து, நடிக்கும் படம் வெங்கட்சுப்பிரமணி மைக் டெஸ்ட்டிங் 1...2...3. ஹர்ஷிதா பன்வர் என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடிக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கருணாஸ், சரத் லோகிச்த்வா, வம்சி கிருஷ்ணா, யார் கண்ணன், மாரிமுத்து, ஆர்.என்.ஆர்.மனோகர், அனு கிருஷ்ணன், ரிஷா, செவ்வாழை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹரியின் உதவியாளர் முருகேஷ் பாரதி இயக்கி உள்ளார். ஷ்யாம் நம்பூதிரி இசை அமைத்துள்ளார், ஜெ.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி ரோஷன் கூறியதாவது:

பொய் பேசுபவர்கள் யாரும் பிடித்து பொய் பேசுவதில்லை. அப்படி பொய் பேசுபவர்கள் யாரும் எங்கள் படத்தை பார்த்தால் நிச்சயம் பொய் பேசமாட்டார்கள். அரசியல்வாதிகள் அதிகமாக பொய் பேசுவார்கள். அவர்கள் பொய் பேசக்கூடாது. இந்த படத்தை பார்த்த பிறகு அவர்கள் எல்லோரும் பொய் சொல்ல தயங்குவார்கள். அந்த அளவுக்கு இந்த படத்தில் புரட்சிகரமான ஒரு கருத்து உள்ளது. இந்த படமே ஒரு புரட்சிகரமான படம் தான். நான் இந்த படத்தில் சேகுவேரா போன்றதொரு புரட்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

சேகுவேரா செஞ்சி அருகே ஒரு கிராமத்தில் பிறந்து மைக் செட்காரனாக இருந்து புரட்சி செய்தால் எப்படி இருக்கும்?? அது தான் எங்கள் படத்தின் கதை களம். நான் அரசியல் கூட்டங்களுக்கு மைக் செட் போடுபவனாக வருகிறேன். அரசியல் கட்சி கூட்டங்களு​​க்கு மைக் செட் போடும் போது சில பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும், அந்த பிரச்னைகளின் மூலம் தான் கதை சூடு பிடிக்கும்.

படத்தில் நாங்கள் பிரதமர் மோடி முதல், சூப்பர் ஸ்டார் ரஜினி வரை சமகால அரசியல் பற்றி பேசியுள்ளோம். படத்தில் புகை பிடிக்கும் காட்சியோ, மது குடிக்கும் காட்சியோ கிடையாது. இந்த படத்துக்காக நான் 250 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்துள்ளேன். படத்தை நாங்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் தான் அதிகம் படம்பிடித்துள்ளோம். இப்போது படத்தின் இறுதிகட்ட பணிகளக் நடைபெற்றுவருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in