இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சென்னையில் வருகிற 23 மற்றும் 24ம் தேதிகளில் ஸ்பானிஷ் திரைப்பட விழா நடக்கிறது. இந்திய திரைப்படத் திறனாய்வு கழகம் மற்றும் டில்லியில் உள்ள ஸ்பெயின் தூதரகம், சென்னையில் உள்ள ஸ்பெயின் துணை தூதரகம் ஆகியவை இணைந்து இந்த பட விழாவை நடத்துகிறது.
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில் நடைபெறும் இந்த திரைப்பட விழாவை ஸ்பெயின் துணை தூதர் ஆன்டனி லோபா துவக்கி வைக்கிறார். 23ம் தேதி தி காம் ஸ்ட்ரோம், ஸ்கோட்ரா, ஐ லேண்ட் ஆஃப் ஜெனிஸ் படங்களும், 24ம் தேதி மதர்டங்க், புருமையர் ஆகிய படங்களும் திரையிடப்படுகிறது. இரு நாட்களும் மாலை 6 மணிக்கு திரையிடல் தொடங்கும். அனுமதி இலவசம். இந்த தகவல்கள் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.