பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
அக்னிபாத் படத்தின் வெற்றி விழா விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாரூக்கான், டைரக்டர் சிரிஷ் குந்தரை அடித்து உதைத்துள்ளார். ஹிருத்திக் ரோஷன், சஞ்சய் சத் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் அக்னிபாத். இப்படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, மும்பையில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார் நடிகர் சஞ்சய் தத். இதில் ஷாரூக்கான், ஷாரூக்கானின் நண்பரும், இயக்குநருமான பாரா கான், அவரது கணவர் சிரிஷ் குந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருந்து நிகழ்ச்சி நன்றாக போய் கொண்டு இருந்தபோது திடீரென ஷாரூக்கானும், சிரிஷ் குந்தரும் அடிதடியில் இறங்கியுள்ளனர். இதில் சிரிஷ் குந்தரை, ஷாரூக்கான் பலமாக அடித்து உதைத்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் விருந்தில் பங்கேற்றவர்கள் இருவரையும் வேறுபக்கமாக அழைத்து சென்றனர். சஞ்சய் தத், ஷாரூக்கை சமாதானம் செய்து அவரை அழைத்து சென்று விட்டார். சிரிஷ் குந்தரும் விருந்தில் இருந்து கிளம்பிவிட்டார். அப்போது அவருடைய முகத்தில் காயங்கள் இருந்தன.
ஏற்கனவே ஷாரூக்கானுக்கும், சிரிஷ் குந்தருக்கும் இடையே வாய்வழி யுத்தம் நடந்து வந்த நிலையில், விருந்தில் ஷாரூக்கானை கோபம் அடையச் செய்யும்படி சிரிஷ் நடந்து கொண்டதால் தான், ஷாரூக்கான் கைநீட்டியதாக கூறப்படுகிறது.