'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
தற்போது மிக பிரமாண்டமாக உருவாகி வரும் 'ஒடியன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு க்ளைமாக்ஸ் காட்சியில் நடித்து வருகிறார் மோகன்லால். இந்தப்படத்தை தொடர்ந்து தான் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்லால் வெளியிட்டிருந்தார். புதியவரான அஜய் வர்மா இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் ராஜீவ் அஞ்சல் மற்றும் கோபால் வர்மா போன்ற இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர்.
இந்தப்படத்தில் கதாநாயகிகளாக மீனாவும், த்ரிஷாவும் நடிக்க இருக்கிறார்கள் என்கிற தகவல் ஒன்று இப்போது கசிந்துள்ளது.. மோகன்லாலுடன் பல படங்களில் நடித்துவிட்ட மீனா, இந்த வருட ஆரம்பத்தில் வெளியான 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படத்தில் கூட மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் மலையாளத்தில் தற்போது தான் நிவின்பாலியுடன் 'ஹே ஜூட்' என்கிற படம் மூலம் அடியெடுத்து வைத்துள்ள த்ரிஷாவுக்கு மலையாளத்தில் இது இரண்டாவது படம். ஆனால் மோகன்லாலுடன் இதுதான் முதல் படம்..