இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கேரளாவில் விஜய்யின் மெர்சல் படம் ரிலீசாவதையொட்டி ஒரு பக்கம் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் விஜய் சினிமாவுக்குள் நுழைந்து 25 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக 'ஜர்னி ஆப் லெஜென்ட்' என்கிற வீடியோ ஆல்பம் ஒன்றை கேரள விஜய் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த பாடலை அனீஸ் பஷீர் என்பவர் இயக்கியுள்ளார். இதற்கு நகாஷ் நௌசாத் என்பவர் இசையமைத்துள்ளார். இந்தப்பாடல் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளும் கலந்து எழுதப்பட்டுள்ளது.
இந்தப்பாடல் கேரள விஜய் ரசிகர்கள் விஜய்யை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை சித்தரிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 'வாய்யா தளபதியே.. கேரளாவின் அதிபதியே” என கேரள ரசிகர்கள் விஜய்யை புகழ்ந்து பாடுவதை பார்க்கும்போது தமிழனாக ஆச்சர்யம் தான் மேலோங்குகிறது.
இந்தப்பாடலை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நடிகை ஹனிரோஸ், இந்தப்பாடலை உருவாக்கிய குழுவினருக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.