தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மத்தாப்பூ சரிக்க, தீப ஒளிகள் அலங்கரிக்க, தித்திக்கும் பலகாரங்கள் சுவைக்க, புத்தாடைகள் பூக்களாய் பூக்க, பட்டாசுகள் பட படவென வெடிக்க ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை மக்கள் குதூகலமாக கொண்டுகின்றனர். இந்தாண்டு சினிமா நடிகைகளான ஜனனி அய்யர், சுஜா வருணி, நந்திதா மற்றும் வேதிகா ஆகியோர் தங்களது தீபாவளி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...
ஜனனி
சின்ன வயது தீபாவளி : மறக்க முடியுமா? தாத்தா வீட்டுல ஒரு கூட்டுக் குடும்பமா சேர்ந்து கொண்டாடுவோம். ஸ்வீட் மெமரீஸ்.
மறக்க முடியாத தீபாவளி : என்னோட 13 வயசுல கொண்டாடின ஒரு தீபாவளியின் போது புஸ்வாணம், என்னோட இடது கையில் தீப்பொறி பட்டு காயம் ஏற்பட்டது.
பிடித்த ஸ்வீட் : காஜு கட்லி
இந்த தீபாவளி : சென்னைல என்னோட குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடப்போறேன்.
சுஜா வருணி
சின்ன வயது தீபாவளி : ஸ்பெஷல் என்று எதுவும் இருக்காது. நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். ஆகையால், எல்லா வீடுகளிலும் கொண்டாடுவது போன்று காலையில் எழுந்து எண்ணெய் வைத்து குளித்து, சாமி கும்பிடுவோம். தாத்தா புதிய உடைகளை கொடுப்பார். கொஞ்சமா வெடி வெடிப்போம். அம்மா ஸ்வீட்ஸ் பண்ணி தருவாங்க.
இரவில் கலர் கலரா நிறைய பட்டாசு வெடிப்பாங்க. நாங்க வேடிக்கை பார்ப்போம். நாங்க தெலுங்கு என்பதால் நிறைய விளக்கு வைத்து தீபவாளியை கொண்டாடுவோம். குறிப்பாக குடும்பமாக கொண்டாடுவோம். அதனாலேயே சின்ன வயதில் கொண்டாடிய எல்லா தீபாவளியும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
பிடித்த ஸ்வீட் : ரசகுல்லா ரொம்ப பிடிக்கும். தாத்தா பால்கோவா வாங்கி வருவார். முறுக்கு, சமோசா எல்லாம் அம்மா வீட்டில் செய்வாங்க, அதுவும் பிடிக்கும்.
மறக்க முடியாத தீபாவளி : 5 ஆண்டுகளுக்கு முன்னர் லேசான மயைில் தீபாவளி கொண்டாடினோம். வீட்டு மாடியில் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து பட்டாசு வெடித்துவிட்டு கீழே இறங்கி வந்தோம். எல்லோரையும் பார்த்து போங்க பார்த்து போங்க சொன்னேன். ஆனால் நானே வழுக்கி கீழே விழுந்துவிட்டேன். எனக்கு மட்டும் இல்லை என் குடும்பத்திற்கே அது மறக்க முடியா தீபாவளி.
ஆடை : எனக்கு சாதாரண கலர்ல சல்வார்ஸ் ரொம்ப பிடிக்கும். கைத்தறி ஆடைகள் பிடிக்கும். அது தான் இந்த வருட ஸ்பெஷல்
இந்த தீபாவளி : ரொம்ப ஸ்பெஷல். பிக்பாஸுக்கு அப்புறம் வர்ற முதல் தீபாவளி. சென்னையில் என்னோட வீட்டில் தான் கொண்டாடப்போறேன். இந்த தீபாவளி கொடுக்கப்போற நல்ல விஷயங்களை அப்படியே வாழ்க்கை முழுக்க எடுத்து கொள்ள போகிறேன்.
நந்திதா ஸ்வேதா
சின்ன வயது தீபாவளி : பெரிய அளவில் கொண்டாட மாட்டோம். வெடி கூட வாங்கி தர மாட்டாங்க, அப்படியே வாங்கி கொடுத்தாலும் ரொம்ப பயப்படுவாங்க. வேண்டும் என்றால் துப்பாக்கி வாங்கி கொடுப்பாங்க, அதுவும் நான் பெண் என்பதால் அது கூட கிடைக்காது.
மறக்க முடியாத தீபாவளி : ஒருமுறை தீபாவளிக்கு பிறகு பள்ளிக்கு போன பசங்க, துப்பாக்கியில் போடுற சின்ன வெடியை கொண்டு வந்தாங்க, அதை விளையாட்டாக நான் சுவற்றில் அடிக்க, அது பெரிதாக வெடித்து சத்தம் கேட்க, டீச்சர் வந்து என்னை அடி வெளுத்துட்டாங்க. அதுவரை நான் எதுக்காகவும் அவரிடம் அடி வாங்கியதே இல்லை.
பிடித்த ஸ்வீட் : காஜு பர்பி, பாதுஷா. இப்போது நிறைய ஸ்வீட்ஸ் வந்துருக்கு, எல்லாத்தையுமே சாப்பிட போறேன்.
உடை : எப்போதும் சேலை தான் வாங்குவேன். நிறைய சேர்ந்துவிட்டது என்று அம்மா திட்டினார்கள், ஆகையால், சல்வார் வாங்கியிருக்கேன்.
இந்த தீபாவளி : எப்போதும் ஏதாவது ஒரு படம் ரிலீஸ் ஆகும். அவர்களுடன் கொண்டாடுவேன். இந்த ஆண்டு எந்த படமும் வராததால் வீட்டில் கொண்டாப்போறேன். ஆனால், வெடி வெடிக்கப்போறதில்லை.
வேதிகா
சின்ன வயது தீபாவளி : நான் அதிகமா நகரத்தில் வளர்ந்த பொண்ணு. நகரம் முழுக்க விளக்குகளாலும், வாண வேடிக்கைகளாலும் ஜொலிப்பதை பார்க்க மிக ரம்மியமாக இருக்கும். சின்ன வயதில் நான் தைரியமாக பட்டாசு வெடிப்பேன். ஆனால் இப்போது பயமாக உள்ளது.
பிடித்த ஸ்வீட் : வீட்டுல பண்ற தேங்காய் பர்பி ரொம்ப பிடிக்கும். கார வகைல சக்லி.
மறக்க முடியாத தீபாவளி : குடும்பத்தோட கொண்டாடுற ஒவ்வொரு தீபாவளியுமே மறக்க முடியாத தீபாவளி தான்.
உடை : இந்த தீபாவளிக்கு அம்மா எனக்கு ஒரு அழகான புடவை வாங்கி அன்பளிப்பாக கொடுத்தார்.
இந்த தீபாவளி : தாய்லாந்தில் ஷூட்டிங் இருந்ததால் இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட முடியாது என்று வருத்தத்தில் இருந்தேன். ஆனால் வருண பகவான் கருணையால் அங்கு மழை பெய்ய ஷூட்டிங் ரத்தாகிவிட்டது. அதனால் இந்தாண்டு குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாடுகிறேன்.
சாக்ஷி அகர்வால்
சின்ன வயது தீபாவளி : தீபாவளி என்பது எங்களுக்கு பெரிய கொண்டாட்டம். மூன்று - நான்கு நாள் கொண்டாடுவோம். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு ஆடை எடுப்போம். நிறைய ஸ்வீட்ஸ் செய்து ஒவ்வொரு நண்பர்கள், வீட்டுக்காக கொண்டு போய் கொடுத்து, அவங்க கூட கொண்டாடுவோம். முதல் நாள் இரவு தூங்கவே மாட்டோம். அன்றைக்கு இரவு கண் முழித்தால் லட்சுமி நம்ம வீட்டுக்கு வருவாங்க என்பது ஐதீகம். இப்போது அதையெல்லாம் மிஸ் பண்றேன்.
ஸ்வீட்ஸ் : நான் ஸ்வீட் பிரியை. தீபாவளி அன்று மட்டும் டயட்க்கு விடுமுறை அளித்துவிடுவேன். குலோப் ஜாமூன், ரச மலாய், காஜு கட்லி என ஒண்ணு விட மாட்டேன்.
மறக்க முடியா தீபாவளி : 4 ஆண்டுக்கு முன்னர், நான் பெங்களூரில் ஒரு வேலையா இருந்ததால் சென்னையில் தீபாவளியை கொண்டாட முடியல. ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடிவிட்டு அந்த ஆண்டு மட்டும் கொண்டாடாமல் தனிமையாக இருந்தது கொஞ்சம் வருத்தம் அளித்தது. ஆனால் திடீரென என் உறவினர் டில்லியிலிருந்து வந்து ஆச்சரியமளித்தனர். அதன்பின் செம்மையாக தீபாவளியை கொண்டாடினேன்.
கடந்தாண்டு அமெரிக்காவில் இருந்தேன். அங்கு நம்மளை விட சிறப்பாக கொண்டாடுகிறார்கள். குறிப்பாக டெக்சாஸில் நிறைய தென்னிந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை நன்றாக கவனித்தார்கள்.
ஆடை : காக்ரா சோளி தான் நிறைய எடுப்பேன். இந்த முறை டாப், பேண்ட், குர்தா எடுத்துள்ளேன். மொத்தமாக 4 டிரஸ் வாங்கியிருக்கேன்.
இந்த தீபாவளி : காலா ஷூட்டிங்கிலிருந்து இப்போது தான் வந்தேன். ரஜினிக்கு மருமகளா நடிப்பது ரொம்பவே ஸ்பெஷல் தீபாவளி. அப்பா, அம்மா கூட சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடுகிறேன்.
நிக்கி கல்ராணி
சின்ன வயது தீபாவளி : மறக்கவே முடியாது. எனக்கு பட்டாசு சத்தம் என்றாலே பயம். அப்பா என் கையை பிடித்து வெடிக்க வைப்பார். திரியை பற்ற வைத்துவிட்டு என்னை தூக்கி கொண்டு ஓடி வந்து விடுவார். ராக்கெட்டிலிருந்து யானை வெடி வரை எல்லா பட்டாசும் வெடித்திருக்கிறேன்.
ஸ்வீட்ஸ் : இதுதான்னு இல்லை. எல்லா ஸ்வீட்ஸுமே பிடிக்கும். பாட்டி இருந்த வரைக்கும் அவங்களே செஞ்சு கொடுப்பாங்க. தீபாவளிக்குன்னு இல்லை வீட்டுல எப்பவுமே ஸ்வீட்ஸ் இருக்கும். நானும் நல்லா சாப்பிடுவேன்.
மறக்க முடியாத தீபாவளி : கல்லூரி நாட்களில் கொண்டாடியது. நண்பர்களுடன் இரவு முழுக்க விடிய விடிய பட்டாசு வெடிப்போம். சென்ற வருடம் சென்னையில் எனக்கு முதல் தீபாவளி. வீட்டில் கொண்டாடினேன்.
ஆடை : சின்ன வயதில் கிராண்ட்டா எடுத்து கொடுப்பாங்க. இப்போது எல்லாம் எளிமை தான் பிடிக்குது.
இந்த வருஷம் : சென்னைல என் வீட்டில் கொண்டாட போற இரண்டாவது தீபாவளி. மாசில்லா தீபாவளியை கொண்டாட போறேன்.