ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தீபாவளி பண்டிகை அக்., 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து சேனல்களும் புதிய படங்களை ஒளிபரப்புவதில் போட்டா போட்டி நடக்கிறது. அந்த போட்டியில் ஜீ தமிழ் ஒளிபரப்புகிறது மிக சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தை. கடந்த ஜூலை மாதம் 21ந் தேதி வெளியான இந்தப் படம் 13வது வாரமாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. வெளியான 3 மாதங்களில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளியன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ரத்ரா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் நடித்துள்ள இந்தப் படத்தை புஷ்கர் காயத்ரி இயக்கி உள்ளனர். சி.எஸ்.சாம் இசை அமைத்துள்ளார், பி.எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். போலீஸ் அதிகாரி மாதவனுக்கும், தாதா விஜய் சேதுபதிக்கும் இடையிலான விக்ரமாதித்தன் வேதாளம் மோதலே படம். 11 கோடியில் தயாரான படம் 50 கோடிக்கு மேல் வசூலித்து இந்த ஆண்டின் வெற்றிப் படங்களின் பட்டியலில் இடம்பெற்ற படம்.