கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
அமீர்கான் நடித்த தங்கல் படத்தில் அவரது இளம் வயது மகளாக நடித்து புகழ்பெற்றவர் ஜைரா வாசிம். தங்கல் படத்தில் அவரது நடிப்பை பார்த்து, அவரை முன்னணி ரோலில் நடிக்க வைத்து சீக்கெரட் சூப்பர்ஸ்டார் என்ற படத்தை தயாரித்துள்ளார் அமீர்கான். இப்படம் தீபாவளி வெளியீடாக அக்., 19-ம் தேதி வெளியாக இருப்பதால் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார் அமீர்.
சமீபத்தில் இப்படம் புரொமோஷன் தொடர்பாக சிங்கப்பூரின் குளோபல் இந்தியன் சர்வதேச பள்ளிக்கு சென்றிருந்தார் அமீர்கான். அப்போது அவர் பேசும்போது, ஜைரா வாசிமை புகழ்ந்தார். அவர் பேசுகையில், ஹிந்தி சினிமா துறையில் மிகச்சிறந்த நடிகை ஜைரா வாசிம். நான் இப்படி சொல்வதால் என் மீது நிறைய நடிகைகள் கோபப்படலாம். ஆனால் நான் சொல்வது உண்மை தான். இன்றைக்கு நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு முன்னாடியாக திகழக்கூடியவர் ஜைரா. அவரிடத்தில் நிறைய திறமைகள் உள்ளது.
இவரை மாதிரியே நம் நாட்டில் இன்னும் திறமையான நபர்கள் சிறிய நகரங்களில் வாழ்ந்து வருகிறார்கள். ஜைரா மும்பையை சேர்ந்தவர் கிடையாது. ஆனால் இங்கு வந்து அவர் தன்னை நிலைப்படுத்தி கொண்டார். தங்கலை தொடர்ந்து இப்போது சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றார்.