‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகள், அலியா பட். இவர் நடிக்க வந்து, 15 ஆண்டுகளானாலும், 12 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கதைகளை தேர்வு செய்து நடிப்பதில், இவர் வல்லவர். அலியா நடித்த பல படங்கள், விருதுகளை பெற்றுள்ளன; இவரும், பல விருதுகளை
பெற்றுள்ளார்.
''ஆண்களுக்காக மட்டும், முதிர் வயது வரை, கதைகள் தயார் செய்கின்றனர். ஆனால், பெண்களுக்கு அப்படி இல்லை; இளம் வயது என்றால், ஹீரோயினாக நடிக்க வேண்டும்; அதற்கு பின், ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். மற்ற எந்தவிதமான வித்தியாச மான முயற்சியையும், நம் இயக்குனர்கள் மேற்கொள்வது இல்லை. இதனால், நடிகையர், ஒரு சில ஆண்டுகளிலேயே, திரைத்துறையை விட்டு விலக வேண்டியுள்ளது. எனக்கு மட்டும் சரியான வாய்ப்பு கிடைத்தால், 90 வயது வரை நடிப்பேன்,'' என்றார் அலியா.