'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
கரண் ஜோகர் தயாரிப்பில், அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாக உள்ள கேசரி படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது கரணின் மற்றொரு தயாரிப்பான பிரம்மஸ்தரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் 2019-ம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது.
ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், ஆலியாபட் முன்னணி ரோலில் நடிக்க, சூப்பர் ஹீரோ கதையில் இப்படம் உருவாக உள்ளது. அயன் முகர்ஜி இயக்குகிறார். முன்னதாக இப்படத்திற்கு டிராகன் என்று பெயர் வைத்திருந்தனர். தற்போதை அதை பிரம்மஸ்தரா என்று மாற்றியுள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இப்படத்தை கரணும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.