ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு மற்றும் பலர் நடித்து அடுத்த வாரம் வெளியாக உள்ள படம் 'மெர்சல்'. இப்படத்தின் சிறப்புக் காட்சி பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ் பெற்ற கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான முன்பதிவுகள் உடனடியாக முடிந்துவிட்டன. இதைத் தொடர்ந்து ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 17ம் தேதி மேலும் ஒரு புதிய காட்சியை சேர்த்துள்ளனர்.
அக்டோபர் 17ம் தேதி நள்ளிரவு 11.55 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் காட்சி 1200 இருக்கைகள் கொண்ட கிரான்ட் லார்ஜ் தியேட்டரில் நடைபெற உள்ளது. 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களிலும் 2900 இருக்கைகள் இப்போதே முன்பதிவு செய்யப்பட்டு முடிந்துவிட்டதாகத் தெரிகிறது.
உலகம் முழுவதும் 3292 தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'மெர்சல்' படம் இந்த வார இறுதிக்குள் மேலும் பல தியேட்டர்களில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.