ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இருக்கும் பிரபலங்களில் தொடர்ந்து ஏதாவது ஒரு பதிவு போட்டு தன்னைத் தொடர்பவர்களுக்கு ஏதாவது தகவலைத் தந்து கொண்டிருப்பவர்களில் அமிதாப் முதலிடத்தில் இருக்கிறார். மற்ற பிரபலங்கள் கூட எப்போதாவது ஒரு முறை மட்டுமே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் சூழ்நிலையில் அமிதாப் மட்டும் அவரது தொடர்பாளர்களை ஏமாற்றுவதேயில்லை.
அமிதாப்பை டுவிட்டரில் தொடர்பவர்களின் எண்ணிக்கை சில தினங்களுக்கு முன்பு 3 கோடியைத் தொட்டது. இந்தியத் திரையுலக நட்சத்திரங்களிலேயே அதிக தொடர்பாளர்களைப் பெற்றுள்ளவர் அமிதாப் மட்டுமே.
தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்திற்கு 42 லட்சம் தொடர்பாளர்களும், கமல்ஹாசனுக்கு 25 லட்சம் தொடர்பாளர்களும் மட்டுமே உள்ளனர். அமிதாப்பிற்கு அடுத்த இடத்தில் 2 கோடியே 90 லட்சம் தொடர்பாளர்களுடன் ஷாரூக் கான் உள்ளார். விரைவில் இவரும் 3 கோடி தொடர்பாளர்களைத் தொட்டு விடுவார். ஆமீர்கான் 2 கோடியே 20 லட்சம் தொடர்பாளர்களையும், சல்மான் கான் 2 கோடியே 60 லட்சம் தொடர்பாளர்களையும் பெற்றுள்ளனர்.
அமிதாப் பச்சன் புதன் அன்று(அக்., 11) அவருடைய 76வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார்.