'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியாவின் மூத்த மற்றும் பிரபலமான வக்கில் ராம் ஜெத்மலானி. 94 வயதை கடந்த ராம் ஜெத்மலானி, சமீபத்தில் தான் தனது ஓய்வை அறிவித்தார். இருந்தாலும் முக்கிய வழக்குகளில் இவர் வாதாடுவார் என்கிறார்கள். இதனிடையே இவரது வாழ்க்கையை சினிமாவாக உருவாக்க முயற்சி எடுத்துள்ளனர்.
இவரது வாழ்க்கை கதையை சுசன் அடல்மேன் என்பவர் எழுதுவதாகவும், ராஜ் குமார் குப்தா இப்படத்தை இயக்க இருப்பதாகவும், படத்திற்கு "தி ரெபல் ஏ பியோகிராபி ஆப் ராம் ஜெத்மலானி" என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தில் ராம் ஜெத்மலானியாக அமிதாப்பச்சனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படம் தொடர்பாக பணிகள் எல்லாம் ஆரம்பக்கட்ட அளவிலேயே இருக்கிறது. அனைத்தும் முடிவானதும் முறைப்படி அறிவிப்பார்கள் என்கிறார்கள்.