Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நான் அந்த மாதிரி பிரச்னைகளை சந்திக்கவில்லை : லட்சுமி ராய்

06 அக், 2017 - 12:48 IST
எழுத்தின் அளவு:
I-had-never-been-a-victim-of-casting-couch---Raai-Laxmi

தென்னிந்திய படங்களில் நடித்து வந்த நடிகை லட்சுமி ராய் அலைஸ் ராய் லட்சுமி, தனது முதல்படமாக பாலிவுட்டில் களமிறங்கி இருக்கும் படம் ஜூலி 2. முதல்படத்திலேயே பிகினி, முத்தக்காட்சி என அதிரடியாக களமிறங்கி இருக்கிறார். இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும், தனது சினிமா பயணம் குறித்து லட்சுமி ராய் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...

ஜூலி 2 படம் நடிகைகள் பாலியல் தொல்லை தொடர்பான விஷயங்களை பேசியிருக்கிறது, நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு அப்படி ஏதும் நடந்துள்ளதா?
ஜூலி 2 படம், நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லை பற்றி சொல்லவில்லை. படத்தில் ஒரு காட்சியில் அப்படி ஒரு விஷயத்தை பதிவு செய்து இருக்கிறோம். சினிமாவிற்கு நான் மிக சுலபமாக வந்தேன். ஆகையால் நான் அதுபோன்ற பிரச்னைகளை சந்திக்கவில்லை. சினிமாவில் நிறைய போராட்டங்களை சந்தித்து இருக்கிறேன், ஆனால் அது வேறு மாதிரியானவை, பட வாய்ப்புக்காக அந்த மாதிரி விஷயங்களை நான் சந்தித்து கிடையாது. ஒட்டுமொத்த சினிமாவையும் அப்படி எண்ணி விட முடியாது. ஒரு சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பாலிவுட்டில் நீங்கள் அறிமுகமாக ஜூலி 2 சரியான படமா?
இது என்னுடைய முதல் பாலிவுட் படம். ஆகையால் அதுப்பற்றிய பாசிட்டிவ்வான விஷயங்களை பேசுவோம். ஜூலி 2 என்னுடைய 50வது படம். தென்னிந்திய படங்களில் நடித்து வந்த நான் இப்போது தான் பாலிவுட்டில் களமிறங்கி உள்ளேன். முதல்படமே பெண்ணை முதன்மைப்படுத்திய படமாக அமைந்துள்ளது. படத்தின் ஒட்டுமொத்த கதையையும் என் தோளில் சுமந்துள்ளேன். இந்த மாதிரி படத்தில் தான் நடிக்க விரும்பினேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்றால் அது ஜூலி-2 வாகத்தான் இருக்கும். இந்தப்படத்திற்காக நான் ஒன்றரை வருடங்கள் பணியாற்றி உள்ளேன். இந்தக்காலக்கட்டத்தில் நான் தென்னிந்தியாவில் 6 படங்களில் நடித்திருப்பேன். அந்தளவுக்கு கஷ்டப்பட்டு இந்தப்படத்தில் நடித்திருக்கிறேன். மேலும் ஜூலி 2 படத்தில் ஒரு அருமையான மெஸேஜையும் சொல்லியிருக்கிறோம். படம் பார்க்கும் போது அது உங்களுக்கே புரியும்.

தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிப்பீர்களா?
தென்னிந்திய படங்கள் என்னை ஸ்டராக்கியது. ஆகையால் தென்னிந்திய படங்களில் அதிக நடிக்க விரும்புகிறேன். ஆனாலும் பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்க ஆசை. ஜூலி 2 படத்தின் ரிசல்ட்டை பொறுத்து நான் நடிப்பது முடிவாகும். ஜூலி 2 டிரைலருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். படத்திற்கும் கொடுக்கும் பட்சத்தில் நான் தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவு செய்வேன்.

மகேந்திர சிங் தோனியுடன் உங்கள் பெயர் கிசுகிசுக்கப்பட்டதே?
இதுப்பற்றி நான் பேச விரும்பவில்லை. நான் என் படம் சம்பந்தமான விஷயங்களையே பேச விரும்புகிறேன். எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை, தோனிக்கு பிறகு நிறைய பேருடன் உடன் நான் டேட்டிங் போய் இருக்கிறேன். ஆனால் தோனியை பற்றி மட்டும் ஏன் கேட்கிறார்கள். அது எனது தனிப்பட்ட விஷயம். மேலும் டேட்டிங் என்ற விஷயமே தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் பெண்கள் சென்றால் தவறாக எண்ணுகிறார்கள்.

அடுத்து என்ன மாதிரி படங்களில் நடிக்க ஆசை?
எனக்கு தெரிந்த வரை நான் அனைத்து விதமான வேடங்களிலும் நடித்துவிட்டேன். ஆனால், இன்னும் சரித்திரம் தொடர்பான படங்களில் நடிக்கவில்லை. உதாரணத்திற்கு பத்மாவதி மாதிரியான படங்களில் நடிக்க ஆசை. இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ராஜா, ராணி மாதிரியான அரச கதையில் நடிக்க ஆசை என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in