'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அபிஷேக் சர்மா இயக்கத்தில் ஜான் ஆபிரஹாம், பர்மனு தி ஸ்டோரி ஆப் பொக்ரான் என்ற படத்தில் நடிக்கிறார். இது பொக்ரான் நடந்த அணுகுண்டு சோதனையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இதில் ஜான் ஆபிரஹாம் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். இப்படம் டிச., 8-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு, சமீபத்தில் ரிலீஸ் தேதி 2018-ம் ஆண்டுக்கு தள்ளிப்போனது.
பர்மனு படம் தள்ளிப்போனது ஏன் என ஜான் ஆபிரஹாம் கூறியுள்ளார். அதில், பொழுதுபோக்கு அம்சத்தை மையமாக வைத்து ஏகப்பட்ட படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் தான் நாட்டுக்கான முக்கியத்துவம் பற்றி வெளியாகின்றன. பர்மனு படமும் அப்படிப்பட்டது தான். இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான படம். ஆகையால் படத்திற்கு ரிலீஸ் தேதி முக்கியமானது, அதை சரியான நேரத்தில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும். பர்மனு படத்தில் நான் நடிகர் மட்டும் கிடையாது, தயாரிப்பாளரும் கூட, கிரிராஜ் நிறுவனத்துடன் இணைந்து நானும் தயாரித்திருக்கிறேன். ஆகையால் எனக்கு பாக்ஸ் ஆபிஸ் வசூல் முக்கியம். ஆகவே அதை கருத்தில் கொண்டு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளோம் என்கிறார்.