வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரும், முதல் உலககோப்பையை பெற்று தந்த ஆல்-ரவுண்டரான கபில் தேவ்வின் வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது. கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இப்படத்திற்கு 83 என்று தலைப்பு வைத்துள்ளார்கள். படத்தின் அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் ரன்வீர் சிங் உடன் கபில் தேவ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்றனர். கபீர் கான் இயக்கும் இப்படத்தை பேன்தோம் பிலிம்ஸ், விபிரி மீடியா, ரிலையன்ஸ் மற்றும் கபீர்கான் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
83 படத்தின் கதைக்களம் இந்திய அணி முதல் உலக கோப்பையை பெற்றதை சுற்றி நகர இருக்கிறது. அதில் கபில் தேவ்வின் மகத்தான பங்கு எப்படிப்பட்டது என்பது தான் கதைக்களம்.