இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் விக்ரம் வேதா. விஜய் சேதுபதி, மாதவன், முக்கிய ரோலில் நடித்திருந்தனர். புஷ்கர் - காயத்ரி இயக்கி இருந்தனர். தாதா விஜய் சேதுபதிக்கும், போலீஸ் மாதவனுக்கும் இடையே நடக்கும் முட்டல் மோதல்கள் தான் கதை. இப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் சிறப்பாக இருந்தது.
இந்நிலையில், ஜப்பானின் டோக்கியோ திரைப்பட விழா அக்டோபர் 25 முதல் நவம்பர் 3 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு விக்ரம் வேதா படம் தேர்வாகி உள்ளது. இந்த விழாவிற்கு உலகளவில் தேர்வான 16 திரைப்படங்களில் விக்ரம் வேதாவும் ஒன்று. இத்தகவலை விக்ரம் வேதா தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.